எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு!

அரசியல்

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான கவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 11) சோதனை நடத்தி வருகின்றனர்.

ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது கரூர் வாங்கல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு நாட்கள் கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல விஜயபாஸ்கர் ஆதரவாளர்களான வேலாயுதம்பாளையம் செல்வராஜ், கவுண்டம்பாளையம் ரகு, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்தநிலையில், கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சிஅம்மன் நகரில் உள்ள விஜயபாஸ்கர் ஆதரவாளரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் நிர்வாகியுமான கவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கவின் வீட்டில் இல்லாததால், அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் விஜயபாஸ்கர் மீதான பிடி இறுகியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தரவரிசையில் No.7: தொடரும் ருதுராஜின் ருத்ரதாண்டவம்!

டாப் 10 நியூஸ்: மக்களுடன் முதல்வர் திட்டம் முதல் நடராஜர் கோவில் தேரோட்டம் வரை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *