அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஜடி போலீசார் 2வது நாளாக இன்று (ஜூலை 7) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார்.
மேலும் அவர் முன் ஜாமீன் கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த வழக்கை விசாரித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான யுவராஜ், செல்வராஜ் உள்பட 4 பேர் வீடுகளில் கடந்த 5ஆம் தேதி சிபிசிஐடி சோதனை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் கரூர் மற்றும் சென்னையில் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக சென்னை அபிராமிபுரத்தில் உள்ள வீடு, கரூர் NSR நகரில் உள்ள வீடு மற்றும் அவரது சகோரதர் சேகரின் வீடு என 9 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சுடுகாட்டில் அடக்கமா? : ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு
தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து உயிர் தப்பிய இளைஞர்!