நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரூர் அருகே குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன் கிடைக்காவில்லை.
தலைமறைவாக இருந்த அவர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 22) கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இன்றைய விசாரணையின் போது அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரினார்.
ஆனால் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். அதேசமயம் விசாரணைக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கக் கூடாது என்றும் விஜயபாஸ்கர் தரப்புக்கு நிபந்தனை விதித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சூர்யாவின் கங்குவா : அண்ணன் படத்தில் இணையும் கார்த்தி
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? செல்வப்பெருந்தகை ரியாக்ஷன்!