நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள்தொகை கண்க்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஒன்றிய அமைச்சரும், எல்ஜேபி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராஞ்சியில் அவர் அளித்த பேட்டியில் “எனது கட்சி எப்போதுமே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தெளிவான நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், பல நேரங்களில், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இரண்டும் சாதியை கணக்கில் கொண்டு திட்டங்களை வடிவமைக்கின்றன. இந்த திட்டங்கள் நாட்டில் உள்ள வெவ்வேறு சாதிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு சாதியினரின் மக்கள்தொகை பற்றிய துல்லியமான தகவல்கள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம், விகிதாச்சாரப்படி நிதி ஒதுக்கப்படும் வகையில் இந்தத் தரவு இருக்க வேண்டியது அவசியம்” என்று பஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு இறுதியில் வர உள்ள நிலையில், சிராக் பஸ்வானின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகளை தொடர்ந்து கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரும், சிராக் பஸ்வானும் சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருவது பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது”: ரஜினி
ஒலிம்பியன் ஸ்ரீஜேஷை அவமானப்படுத்திய கேரள அரசு… இரு முறை பாராட்டு விழாவை ரத்து செய்து அதிர்ச்சி!