”தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை”: எல்.முருகன் குற்றச்சாட்டு!

அரசியல் இந்தியா

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை அதிகரித்து வருவதாக டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று (ஜூலை 9) குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து பாஜக சார்பில் டெல்லிக்கு சென்று முறையிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழக பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில், பொன் பால கணபதி, கார்த்தியாயினி, குழந்தைவேல் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழு இன்று டெல்லி சென்றுள்ளது.

அவர்கள் தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு சென்று, தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க உள்ளனர்.

முன்னதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது எல்.முருகன் பேசுகையில், ”தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாளுக்கு நாள் பட்டியலின தலைவர்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டினார்.

மேலும் அவர், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர்.

தமிழகத்தில் தலித்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமையும், தீண்டாமையும் நிலவுகிறது. 22 ஊராட்சிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களால் அவர்களின் பணியை செய்ய முடியவில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சமூகநீதியில் தாங்கள் தான் முன்னோடி என கூறிக்கொள்ளும் திமுக, தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிவிட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த குழுவானது டெல்லி வந்துள்ளது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்!

ஆண்டாள் டூ ஆர்யமாலா: இயக்குநர் – தயாரிப்பாளர் இடையே நீடிக்கும் தகராறு என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *