வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சண்டாளன் என்ற ஒரு சமூகத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தி முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு திமுக அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். மேலும் சீமான் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில் தான் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அஜய் என்பவர் எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் முறையிட்டார்.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய எஸ்சி/எஸ்டி ஆணையம், ஆவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் போலீசார் காவல் நிலைய போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 29ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக பட்டாபிராம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!’
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டார் ஸ்டாலின்
எம்.எல்.ஏ-க்கள்- பெண்கள்- தலித் இல்லை… பாஜக ஆறு பேர் குழு மீது புகார்கள்!