சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததால் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ராணுவ வீரர் பிரபுவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்நாட்டில் குண்டு வைப்பதாக மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பாண்டியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து கரு.நாகராஜன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?
அதிபர் தேர்தல் : ட்ரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளி… யார் இந்த விவேக் ராமசாமி?