one more case filed against amar prasad

அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது!

அரசியல்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது முதலமைச்சர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் படத்தை ஒட்டியது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை அருகே பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜக கொடி கம்பம் நட்ட விவகாரத்தில், பாஜகவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.

அக்டோபர் 21ஆம் தேதி கைதான இவரை நவம்பர் 3ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அமர்பிரசாத் மீது அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு போலீஸ் தயாரானது. அவர் மீது ஏற்கனவே ஏதாவது புகார்கள், வழக்குகள் இருக்கிறதா என்ற தேடுதலில் இறங்கினர்.

இதுகுறித்து மின்னம்பலத்தில், டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில்  தெரிவித்திருந்தோம்.

அதில், “செஸ் ஒலிம்பியாட்ஸ் போட்டிகளின் போது கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் விளம்பரத்தில் மோடி படம் இல்லை என்று சொல்லி மோடி படத்தை ஒட்டினார் அமர் பிரசாத்.

மேலும் நுங்கம்பாக்கத்தில் போலீஸாரை தடுத்த சம்பவம் ஒன்றில் அமர் பிரசாத் ஈடுபட்டிருந்தார்.  ஆருத்ரா கோல்டு கம்பெனி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரீஷ் கடைசியாக போன் செய்தது அமர் பிரசாத் ரெட்டிக்குத்தான் என்று அப்போதே போலீசார் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதுபோன்ற விவகாரங்கள் மேலும் பாஜகவினர் சிலரே அமர் பிரசாத் மீது பணப் புகார்கள் கூறியிருந்ததை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது போலீஸ்.

இவற்றின் அடிப்படையில் அமர் பிரசாத் மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதுதான் போலீஸாரின் திட்டம். இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி இன்று பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது 3 பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது தமிழக முதல்வர் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், நாளை அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சூர்யா 43 அப்டேட் இதோ!

பெட்ரோல் குண்டு வீச்சு – நியாயமான விசாரணை இல்லை: ஆளுநர் மாளிகை!

+1
0
+1
0
+1
0
+1
8
+1
1
+1
0
+1
1