அரசுக்கு இழப்பு : அமைச்சரை விடுவிக்க மறுப்பு!

செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் விடுவிக்கக் கோரி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி,

உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதன் மூலம் 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவரது மகன், உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

case against minister ponmudi high court order

இந்த உத்தரவை எதிர்த்து பொன்முடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (நவம்பர் 12) விசாரணைக்கு வந்த போது,

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் சாட்சிகளின் வாக்குமூலங்களிலிருந்து, மனுதாரருக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளது,

என்று தெரிவித்த நீதிபதி, இவ்வழக்கிலிருந்து பொன்முடியை விடுவிக்க மறுத்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பிரியா

நளினி இன்று விடுதலை ஆவாரா?

ஸ்டாலின் கூட்டிய கூட்டம்: புறக்கணித்த கட்சிகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts