மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

Published On:

| By Selvam

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீசார் இன்று (ஜூலை 7) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கடந்த ஜூலை 4-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரேகா ஷர்மாவிற்கு அவரது உதவியாளர் ஒருவர் குடைபிடித்த வீடியோவை பகிர்ந்து, மஹுவா மொய்த்ரா கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த பதிவை மஹுவா மொய்த்ரா டெலிட் செய்துவிட்டார்.

இதுதொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் மஹுவா மொய்த்ரா மீது மகளிர் ஆணையம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் பாரதிய நியாய சன்ஹிதா 79-வது பிரிவின் கீழ் (பெண்களை அவமதிக்கும் வகையில் அவதூறு பரப்புதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “டெல்லி போலீஸ் என் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நான் நதியாவில் தான் இருக்கிறேன், மூன்று நாட்களில் என்னை கைது செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில், ரேகா ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிர்ந்து, டெல்லி போலீஸை டேக் செய்து உங்கள் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யலாம் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விடாமுயற்சி செகண்ட் லுக்… மோட்டிவேஷன் சொன்ன அஜித்

கடலூர் பாமக நிர்வாகி மீது தாக்குதல்…ராமதாஸ் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share