முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
2019ல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டதாக பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும்,
அவற்றை அரசாணையில் இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று(பிப்ரவரி 19) விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி. மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதை தெரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குத் தொடர்ந்த பாலசந்தருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கலை.ரா
“தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்”: பழ. நெடுமாறன்
அதானி விவகாரம்: மாநிலங்களவையில் கடும் அமளி!