‘போராடடா ஒரு வாளேந்தடா’, ‘உனக்காக நாடே அழுகுதப்பா’… ரசிகர்கள் அதிகம் பகிரும் வீடியோக்கள் இதுதான்!

அரசியல்

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையுமே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அவரின் பூத உடலுக்கு தற்போது அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள், ரசிகர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் கோயம்பேடு தொடங்கி வடபழனி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறும் அளவுக்கு கூட்டம் குவிந்து வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பாடல்கள், வசனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவை விஜயகாந்த் வாழ்வோடு எவ்வளவு தூரம் பொருந்துகின்றன என ரசிகர்கள் உருக்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

அதில் இருந்து ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் பாடல்கள், வசனங்களை இங்கே பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

விஜயகாந்த் வாழ்க்கையை மாற்றிய ஒரே ஒரு டோஸ்!

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் : அரசியல் கட்சியினர், திரையுலகினர் நேரில் அஞ்சலி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *