இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்… கண்ணீரில் மூழ்கிய பிரபலங்கள்!

Published On:

| By Manjula

கேப்டன் என்று திரையுலகினராலும், தொண்டர்களாலும், ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (டிசம்பர் 28) காலமானார்.

அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உடல் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

வாகனம் செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அவருடைய உடலை பார்த்து கதறி அழுகின்றனர்.

மக்கள் வெள்ளத்துக்கு நடுவே தற்போது விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகம் நோக்கி கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கிடையில் விஜயகாந்தின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவற்றை இங்கே பார்க்கலாம்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

அரசியலில் புது திசை : கமல் புகழாரம்!

தேசபக்தியைத் தூண்டியவர்… விஜயகாந்த்துக்கு அமித்ஷா இரங்கல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel