கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு தடை!

அரசியல்

கனடாவில் துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் டெக்சாஸில் உள்ள ராப் தொடக்கப்பள்ளியில் 19 குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்திற்கு பிறகு, கனடாவில் கைத்துப்பாக்கிகள் முடக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அறிவித்தார்.

canada bans all handgun sales

இந்தநிலையில், நேற்று (அக்டோபர் 21) முதல் கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா அமலுக்கு வந்தது.

இந்த மசோதாவின்படி, குடும்ப வன்முறை மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களுக்கு துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்படாது. துப்பாக்கி குற்றங்களை விசாரிக்க சட்ட அமலாக்கத்திற்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். துப்பாக்கி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மசோதாவை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூட்டோ, “கனடாவில் கைத்துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கொடிய ஆயுதங்களை நமது சமூகங்களிலிருந்து அகற்ற அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

canada bans all handgun sales

கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கி எண்ணிக்கை 70 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இதனால் கனடா நாடாளுமன்றத்தில் கடந்த மே மாதம் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமெரிக்காவைவிட கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறைவாகவே நடந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கனடாவில் 277 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் 19,000 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

செல்வம்

போக்குவரத்து விதி: மீறினால் அபராதம் இல்லை!

ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றத் தடை? ஸ்டாலின் ஆலோசனை! 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *