அழைத்தார் எடப்பாடி: சென்றார் கே.என். நேரு

அரசியல்

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதை அமைச்சர்கள் பார்க்கவில்லையா என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அங்கு சென்றிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.

சென்னையில், முகலிவாக்கம், கொளப்பாக்கம்,மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதித்த இடங்களை நேற்று(நவம்பர் 14) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

அப்போது சென்னையில் மழைநீரே தேங்கவில்லை என்று ஆளும் அரசு தவறான தகவலை பரப்பி வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர், மக்கள் இங்கு படகுகளில் செல்வதை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தநிலையில் இன்று(நவம்பர் 15) காலையிலேயே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், துணைமேயர் உள்ளிட்டோர் முகலிவாக்கம் பகுதியில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் தேங்கியிருந்த மழைநீரை மின்மோட்டார் கொண்டு அகற்ற உத்தரவிட்டனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “இனி மழை வந்தால் தண்ணீர் தேங்காதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர் செல்லும் பாதைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. அப்படி தண்ணீர் தேங்கினாலும் மோட்டார் பம்புகளை வைத்து வெளியேற்றி விடுவோம்.

அடுத்த ஆண்டு இங்கு மழைநீர் தேங்காதபடி ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவோம். மழைநீர் செல்லும் வழித்தடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளால் தான் தண்ணீர் செல்வதில் ஏற்படுகிறது. வாய்க்காலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டு இருக்கிறது. மக்களும் அதே கோரிக்கையைதான் வைக்கின்றனர். பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

தவறுகள் இழைக்கும் ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய டெண்டர் விட்டு பணிகளைத் தொடங்க குறைந்தது 3 மாதம் ஆகும்.

எனவே தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறோம். அதே தவறை தொடர்ந்து செய்தால் வருங்காலங்களில் ஒப்பந்தம் வழங்கமாட்டோம் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

கலை.ரா

வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது நடவடிக்கை என்ன? – அமைச்சர் விளக்கம்

”கட்டாய மதமாற்றம் நாட்டுக்கு அச்சுறுத்தல்!” – உச்சநீதிமன்றம்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0