அமமுக பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.
பொதுக்குழு சுதந்திர தினத்தன்று நடைபெறுவதால் காவல்துறைக்கு தொந்தரவு கொடுக்காத வகையில் தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் , “ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிற நம் இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செயற்குழு – பொதுக்குழு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் ஜெயலலிதாவின் லட்சியத்தை வென்றெடுப்பதற்கான வாய்ப்பாகவே இதனை பார்க்கிறேன்.
இந்த கூட்டத்தை திருச்சியில் நடத்தலாம் என்று நினைத்தோம் ஆனால் நம்முடைய நிர்வாகிகளும் , தொண்டர்களும் விரும்பிய ஜெயலலிதா பொதுக்குழு நடத்திய இடமான சென்னை வானரகத்தில் நடத்த முடிவுசெய்துள்ளோம்.
எனவே மிகுந்த பொறுப்புணர்வோடு ஒவ்வொருவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வாகனங்களில் வரும் போது பாதுகாப்பாக வாருங்கள்.
கூட்டம் நடைபெறும் நாள் சுதந்திர தினமாக இருப்பதால் காவல்துறையினர் கூடுதல் பணிச்சுமையோடு இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பொதுக்குழுவில் முக்கியமான தீர்மானங்கள் விவாதித்து நிறைவேற்ற இருக்கிறோம்.அத்தீர்மானங்கள் தமிழ் நாட்டின் அரசியல் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக இருக்கும். திமுகவை வீழ்த்தி ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக இது இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!