அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய பதில்!

அரசியல்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மத்திய அமைச்சரவையில் தான் மாற்றம் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

” தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி முன்பு அங்கு ஆட்சி செய்தவர்களும் மேகதாது அணை கட்டுவோம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அப்போதும் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு தான் இருந்தோம். அதேநிலையில் தான் எங்களுடைய ஆட்சி இப்போதும் உள்ளது.

கலைஞர் எப்படி மேகதாது அணை விவகாரத்தில் உறுதியோடு இருந்தாரோ அதே உறுதியுடன் தான் இந்த ஆட்சியும் இருக்கும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்” என்றார்.

கவர்னரை மாற்றுவதற்கு ஏதாவது கோரிக்கைகள் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்தால் இந்த பிரச்சினையே தேவையில்லை” என்று கூறினார்.

சென்னை பல்கலைகழகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படுமா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். இருக்கின்ற பல்கலைகழகத்திற்கு கலைஞர் பெயர் வைக்கலாமா..இல்லை புதிதாக பல்கலைகழகத்தை உருவாக்கி அந்த பல்கலைகழகத்திற்கு கலைஞர் பெயர் வைக்கலாமா என்பதை பரிசீலிப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலினிடம் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் வருமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ”தற்போது மத்திய அரசின் அமைச்சரவையில் தான் மாற்றம் வரும் என செய்திகள் வருகின்றன” என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்

டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட் நியூஸ்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *