செப் -26 ல் அமைச்சரவைக் கூட்டம்!          

அரசியல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழக சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்பது பேரவை விதி.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றம் கூட்டப்பட்டு 6ஆம் தேதி முதல் மே10ஆம் தேதி வரை துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட இருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் சட்ட மசோதா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை,

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை, கூட்டத்தொடரின் இறுதி நாளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டப்படும்போது மேலும் எந்தெந்த சட்ட மசோதாக்களை தாக்கல் செய்யலாம், ஏற்கனவே நிலுவையில் உள்ள மசோதாக்கள், புதிதாக வர உள்ள தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிக்க அமைச்சரவையைக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வரும் 26ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கலை.ரா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் அசோக் கெலாட்

என்ஐஏ சோதனை – பிஎஃப்ஐ ஸ்டிரைக் : அரசு பேருந்துகள் மீது தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.