பிரதமர் மோடி தலைமையில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 18) துவங்கியது. இந்த கூட்டத்தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணங்கள், சாதனைகள் குறித்து பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் விவாகரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் நாடு முழுவதும் பெண்களின் வாக்குகளை கவர்வதற்கும் பெண்கள் மத்தியில் பிரதமர் மோடியின் இமேஜை உயர்த்துவதற்கும் பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதவை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
செல்வம்
“அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது” – நாராயணன் திருப்பதி
நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி