நாளை மறுநாள் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூட உள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்பே தலைமைச் செயலகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக கடந்த சட்டசபையில் சட்டம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது.
மோனிஷா
வங்கதேச டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா
கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நெய்மர்: ஏன் தெரியுமா?