இனிதான் எடப்பாடி பழனிசாமியின் வேகத்தை பார்க்கப்போகிறோம் என்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ,
“இனி கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்து நம்முடைய ஆட்சிதான் என்ற உணர்வை ஊட்டியிருக்கிறது இந்த தீர்ப்பு.
இனி எந்த விவாதங்களுக்கும், கேள்விகளுக்கும் இடமில்லாத வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி இந்த கட்சியை வழி நடத்தினார்களோ, அதே போன்று எடப்பாடி பழனிசாமி வழிநடத்துவார் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பதாக நான் பார்க்கிறேன்.
அதிமுக தனித் தன்மையோடு இருந்தால் இந்த இயக்கத்துக்குத்தான் வாக்களிப்போம் என்ற மன நிலையில் மக்கள் இருக்கிறார்கள். எனவே இந்த நேரத்தில் வந்துள்ள தீர்ப்பு வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும்.
எடப்பாடி பழனிசாமியின் வேகத்தை இனிதான் பார்க்கப்போகிறீர்கள். அடுத்தது அதிமுக ஆட்சிதான்” எனக் கூறினார்.
பிரியா
விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்: கே.பி.முனுசாமி
எடப்பாடிக்கு வாழ்த்துகள்…. ஆனால்: திருமாவளவன் திடீர் மெசேஜ்!