நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கட்சி குறித்த அறிவிப்பை விஜய் இன்று (பிப்ரவரி 2) வெளியிட்டார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் தொடரும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வதற்காக புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை எங்கள் தலைவர் விஜய் ஆரம்பித்துள்ளார். கட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யாருக்கு எதிராக அரசியல் கட்சி? விஜய் பதில்!
தமிழக வெற்றி கழகம்: விஜய் புதிய கட்சி!