bussy anand

தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் கண்கலங்கிய புஸ்ஸி ஆனந்த்!!

அரசியல்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் புஸ்ஸி ஆனந்த் கண் கலங்கிய காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று (ஆகஸ்ட் 22) மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கட்சிக் கொடியைக் கொடி கம்பத்தில் ஏற்றிவிட்டு, விழா நடக்கும் இடத்தில் முன் வரிசையில் விஜய்யும் அவருக்கு இடது பக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது கழகத்தின் கொடிப்பாடல் ஒளிப்பரப்பாக, அதைக்கண்டு விஜய்யும்,  புஸ்ஸி ஆனந்தும் திடீரென கண்கலங்கிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக காலை 9.15 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய், புஸ்ஸி ஆனந்த்தின் வரவேற்புரையைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கட்சியின் உறுதி மொழியை ஏற்றார். பின்னர் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்துவிட்டு, கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் கொள்கை குறித்துப் பேசிய விஜய், கட்சியின் கொள்கையும் கொடிக்கு பின்புள்ள காரணமும் அடுத்த மாதம் நடக்க இருக்கிற கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.

விழா ஆரம்பிப்பதற்கு முன் புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்?

”இது நம் கட்சிக்கொடி மட்டுமல்ல…” : கொடி அறிமுக விழாவில் விஜய் பேச்சு!

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் : கொடி செல்லும் செய்தி என்ன?

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0