பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2024-2025 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் வருமான வரி வரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்படும் என நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்காமல், அதில் சில மாற்றங்களை மட்டும் அறிவித்துள்ளார்.
அதன்படி புதிய வரி விதிப்பு முறைப்படி 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
அதே வேளையில் 3 முதல் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானம் பெறுவோர் 5 சதவிகிதமும், 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோர் 10 சதவிகிதமும்,
10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோர் 15 சதவிகிதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோர் 20 சதவிகிதமும், 15 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுவோர் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும்.
புதிய வருமான வரி முறையின் கீழ், வரி குறைப்பு மூலம் ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.17,500 சேமிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வருமான உச்சவரம்பில் 3 முதல் 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானம் பெறுவோர் 5 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 முதல் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானம் பெறுவோருக்கு அது மாற்றப்பட்டுள்ளது.
மேலும் புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலையான கழிவு தொகையானது, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்த தொகையானது ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்ஜெட் 2024 : ஆந்திரா, பீகாருக்கு அடித்த ஜாக்பாட்… அதிக நிதி ஒதுக்கீடு!
கள்ளுக் கடைகளைத் திறக்கச் சொல்வது நீதி ஆகுமா ?