பட்ஜெட் : தென்மாநிலங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா?

அரசியல் இந்தியா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி, முதல் முறையாக வேலைக்கு சேர்ந்தால்  ஊக்கத்தொகையாக ஒரு மாத ஊதியம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

சிறப்பு அந்தஸ்து கோரி வரும் என்.டி.ஏ ஆளும் மாநிலங்களான பிகாருக்கும் ஆந்திராவுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை.

தமிழ்நாடு கோரியது…

பட்ஜெட் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதி

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்

புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார் ஸ்டாலின்.

ஆனால் 58 பக்கங்கள் மற்றும் 14,692 வார்த்தைகள் கொண்ட இன்றைய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதை எதிர்பார்க்கவில்லை என தமிழக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

கேரளா கோரியது

மத்திய அரசிடம் ரூ.24,000 கோடி சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை கேரள அரசு கோரியது.

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத் திட்டப் பணிகளைத் தொடர ரூ.5,000 கோடி, மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு ரூ.3,686 கோடி, ரப்பரின் ஆதரவு விலை கிலோவுக்கு ரூ. 250 ஆக உயர்வு. கண்ணூரில் எய்ம்ஸ் மருத்துவமனை என சில முக்கிய கோரிக்கைகளை வைத்தது.

ஆனால் கேரளாவுக்கான சிறப்பு நிதியாகவும் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

கர்நாடகா கோரியது

நிதி ஆயோக் இடைக்காலப் பரிந்துரைபடி கர்நாடகாவுக்கு சிறப்பு மானியமாக ரூ.5,495 கோடி அம்மாநில முதல்வர் சித்தராமையா கோரியிருந்தார்.

கர்நாடகம் ரூ.4.30 லட்சம் கோடிக்கு மேல் வரி பங்களிப்பு அளிக்கிறது. கர்நாடக 100 ரூபாய் கொடுத்தால் நமக்கு 13 ரூபாய் தான் வருகிறது. அதனால் நமக்கு வர வேண்டிய வரியை கேட்டு பெற வேண்டும் என்று சித்தராமையா கூறியிருந்த நிலையில், கர்நாடகாவுக்கும் எந்த சிறப்பு திட்டமும் கொடுக்கப்படவில்லை.

தெலங்கானாவுக்கும் தனியே எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இன்றைய பட்ஜெட்டில் இடம் பெற்ற வேலைவாய்ப்பு, 3 கோடி வீடுகள் கட்டும் திட்டம் என ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் அறிவிக்கப்பட்ட ஒரு சில திட்டத்தின் பயன்கள் மட்டும் தென்மாநில மக்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பட்ஜெட் எதிரொலி – அதிரடியாய் குறைந்த தங்கம் வெள்ளி விலை – எவ்வளவுனு பாருங்க?

பெண்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி… உழைக்கும் மகளிருக்கு விடுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *