மத்திய பட்ஜெட் நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதிமுக எம்.பி.யும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. நாளை மறுதினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதனை முன்னிட்டு இன்று (ஜனவரி 30) டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

ரவீந்திரநாத் எம்.பி.க்கும் அழைப்புக் கடிதம் வந்துள்ளது.
அந்த அழைப்பில், அதிமுக மக்களவை தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் பிரகலாத் ஜோஷி. பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரவீந்திரநாத்தை அதிமுக மக்களவை உறுப்பினர் என குறிப்பிட வேண்டாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா–