பட்ஜெட் 2024 : வேளாண் துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு!

அரசியல் இந்தியா

2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கினார்.

அவர் தனது உரையில் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். உலக அளவில் பொருளாதார தேக்க நிலைக்கு நடுவே இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. நாட்டில் விலைவாசி கட்டுபாட்டில் உள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் ஏழைகள், பெண்கள். இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தப் பட்ஜெட் 9 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வேளாண் & அதுசார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அதன்படி இயற்கை விவசாயத்தில் ஒரு கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர். எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கப்படும். காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும்.

32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் செய்யப்படும்.

பருவநிலையை தாக்கு பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தவுள்ளது.

விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளது. கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

இதற்காக வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல் : தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *