பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக ஆனந்தன் நியமனம்!

அரசியல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ராமாபாய் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) பகுஜன் சமாஜ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தன் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

யார் இவர்?

1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில்  பஞ்சாட்சரம்- சரஸ்வதி தம்பதியினருக்கு பிறந்தவர்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 – 1997 வரை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார்.

அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோவிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றினார்.

இதையடுத்து தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்களை கொண்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

சினிமா நட்சத்திரங்களான நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரின் விவாகரத்து வழக்குகளை நடத்தியவர். 26 ஆண்டாக தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.

சுயமரியாதை திருமணம் செல்லாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்றவர்.

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்தும் அவரை விடுவித்தவர்.

ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இடம், மற்றும் உணவு வசதி என உதவிகள் செய்து வருகிறார்.

இவரது சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைகழகம் ஆனந்தனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று சட்ட விளக்கம் அளிப்பவராக இருந்து வருகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு 41 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாக்குகள் வாங்கினார்

2006ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து செயல்பட்டு வந்த ஆனந்தன் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 24-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 24-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *