பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து அக்கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராமாபாய் அலுவலகத்தில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் படுகொலை திட்டமிட்ட அரசியல் படுகொலையாகும், அதனால் இக்கொலை வழக்கினை CBI கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும்
ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதை உடன் அரசு பொது இடத்தில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும்
தற்பொழுது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் மாநில தலைவர் கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதனால் உண்மை கொலையாளியை கண்டுபிடித்து கொலையின் பின்னணிகளை கண்டறிய வேண்டும்
காவல் துறையின் உளவுத்துறை பிரிவின் தோல்வியால் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதால் உளவுத்துறை ADGPயை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், தொகுதி தலைவர்கள், பகுதி டிவிஷன்,செக்டார், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் காலை 8 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு நடைபெறுகின்ற போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாநில குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை… கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு!