“ஜெய் பீம், வீரவணக்கம்”… போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலம்!

Published On:

| By Selvam

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்வதற்காக சென்னை பெரம்பூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பொத்தூருக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சாமிகோவில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பாக ஆம்ஸ்ட்ராங் நின்றுகொண்டிருந்தபோது அவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிகோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், “அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தில் மணிமண்டம் கட்டிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

இதனைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பொத்தூரில் தங்களது உறவினருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்டனர். இதற்கு அரசு சார்பில் ஆட்சேபனை தெரிவிக்காததால், நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக மூலக்கடை, மாதவரம், செங்குன்றம் வழியாக பொத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது.

ஆம்ஸ்டாங் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து “ஜெய் பீம்… ஜெய் பீம்… விரவணக்கம்… வீரவணக்கம்” என்ற முழக்கத்தை எழுப்பி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு பொத்தூரில் புத்த மதச்சடங்கு முறைப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… உதயநிதி பிரச்சாரம்!

“ஒரு மாதத்தில் 133 கொலைகள்”: சீமான் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share