இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று (ஏப்ரல் 3) காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தெற்கு டெல்லியில் விஜேந்தர் சிங் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 3) பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே தலைமையில் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.
#WATCH | Boxer & Congress leader Vijender Singh joins BJP at the party headquarters in Delhi#LokSabhaElections2024 pic.twitter.com/5fqOt9KIcp
— ANI (@ANI) April 3, 2024
முன்னதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் விஜேந்தர் சிங் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜேந்தர் சிங், “விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. மோடிக்கும், அமித்ஷாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை போட்டிகளில் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற விஜேந்தர் சிங், பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Cyclone Alert: சூறாவளிக்காற்று வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்!
மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விடமாட்டேன் : எடப்பாடி பழனிசாமி
Comments are closed.