”விஜய்யை விமர்சித்த பிறகு சின்னப்பையன் கூட முறைக்குறான்”: போஸ் வெங்கட்
சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மாநாட்டில் அவரின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
மாநாடு முடிந்ததும் திமுக ஆதரவாளரான நடிகர் போஸ் வெங்கட் ட்விட்டரில் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு” என்ற போஸ் வெங்கட்டின் பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவரை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
இந்நிலையில் சமீபத்தில் சினிஉலகத்திற்கு போஸ் வெங்கட் அளித்த பேட்டியில் “விஜய்யோட மாநாட்டு பேச்சை 10 முறை கேட்டுதான் நான் அன்றைக்கு ட்விட் போட்டேன். ஆனால், முதலில் திமுகவில் இருந்து யாருமே விமர்சிக்கல. ஏன்னா, விஜய்னா மாஸ் ஹீரோ . லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்னு பயந்தாங்க. அப்படினா ஏன் அரசியல்ல இருக்கனும். அதனால, நான் முதலில் விமர்சித்தேன்.
எனக்கு திடீர்னு ஒரு படம் கமிட் ஆகும். பின்னர், என்னை அதுல இருந்து நீக்கிடுவாங்க. ஏன்னு கேட்டா படத்தின் தயாரிப்பாளர் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பாரு. நான் திமுகல இருப்பதால் என்னை நீக்கிடுவாங்க. இப்போ, நான் ரோட்டில் சென்றால் சின்ன பையன் கூட முறைச்சிட்டு போறான். அவன் விஜய் ரசிகன்தான் என எனக்கு தெரியும். நான் ஹோட்டல் போன போது ஒருவர் என்னை பார்த்ததும் சிடு சிடுத்தார். நீங்க என்ன விஜய் ரசிகரா என்று அவரிடத்தில் கேட்டேன். அவர் சிரித்தார். அரசியல் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நானும் விஜய்க்கு ரசிகன் தான். முதல் நாள் அவர் படம் பார்ப்பேன். நான் அரசியல் களத்தில் தான் அவரை எதிர்த்து பேசினேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ரத்து!
விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ரத்து!