பாஜக இலக்கும்… மாம்பழம் விலையும் : வைரலாகும் முன்னாள் தேர்தல் ஆணையரின் பதிவு!

Published On:

| By Kavi

“400ஆ… ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200 வரை குறையும்” என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதால் அனல் பறக்க அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ரோடுஷோ நடத்தி வருகிறார். இன்று சென்னையில் ரோடு ஷோ நடத்துகிறார்.

இந்த முறை பாஜக 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தொடங்கி மாநில தலைவர் அண்ணாமலை வரை கூறி வருகின்றனர்.

இந்தசூழலில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

அதில், “இப்போது அவர்கள் 400+ என்று சொல்லி வருகிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள். இது 250க்கும் கீழ் குறையும். இது ஜூன் முதல் வாரதில் 175-200 ஆக இருக்கும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றி பேசுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் குரேஷி எந்த அரசியல் கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

இருந்தாலும் அவர், “பாஜகவைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். மோடி மீதும் பாஜக மீதும் உங்களின் வெறுப்பு தெரிந்துவிட்டது. நீங்கள் காந்தி குடும்பத்தின் ஊதுகுழல்” என்று அஷ்வினி சவுபே என்பவர் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்

பிரியா

பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? – பிடிஆர் புது விளக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel