பி. இராமன் BJP’s New Mantra for Victory
தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்த விமர்சனங்கள், ஊழல் எதிர்ப்புப் போராளியே மதுபான ஊழலுக்கும் ‘ஷீஷ் மஹால்’ வசீகரத்திற்கும் எவ்வாறு பலியானார் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான விரிவான சூழ்ச்சிகளையும், கட்சியை அவமானப்படுத்தி, அதன்மீது களங்கம் சுமத்தும் மறைமுக நடவடிக்கைகளையும் யாருமே குறிப்பிடவில்லை.
வெற்றிக்காக நரேந்திர மோடியை மட்டுமே நம்பியிருப்பதை ஹரியானா தேர்தலிலிருந்தே பாஜக நிறுத்திவிட்டது. பிரதமர் இப்போது நட்சத்திரப் பிரச்சாரகர்களில் ஒருவர் என்பதோடு சரி. பழைய பிரச்சார உத்திகள் போய் இப்போது நுண் அளவிலான செயல்திட்டங்கள் வந்துவிட்டன.
புதிய ஆயுதங்கள் BJP’s New Mantra for Victory
பாஜகவின் புதிய ஆயுதக் கிடங்கில் உள்ள முக்கியமான ஆயுதங்கள் இவைதான்: அமலாக்க இயக்குநரகத்தையும் மத்தியப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் நற்பெயரைக் கெடுத்தல், லெப்டினன்ட் கவர்னர் அல்லது ஆளுநரின் தலையீட்டின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை மூச்சுத் திணறச் செய்தல், மத்திய நிதியை நிறுத்தி வைத்தல் அல்லது மறுத்தல், வாக்காளர் பட்டியல்களை மாற்றுதல், பொறுப்பற்ற இலவசத் திட்டங்களை அறிவித்தல் ஆகிய செயல்திட்டங்கள் அரங்கேறுகின்றன. இவை அனைத்தும் மாபெரும் தேர்தல் நிதிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. BJP’s New Mantra for Victory
இந்தத் திட்டம் ஹரியானாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது தில்லியில் மத்திய அரசில் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டாவது நபர் தனது வடக்குத் தொகுதி அலுவலகத்திலிருந்து இவற்றையெல்லாம் நேரடியாக மேற்பார்வையிட்டு அமல்படுத்தினார். லெப்டினன்ட் கவர்னர், காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, நகராட்சி நிறுவனம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் என தில்லியில், மத்திய அரசின் ஒவ்வொரு பிரிவும் பாஜகவின் இந்தச் செயல்திட்டத்தில் பங்கேற்றது. மற்றவர்களும் உதிரியாகச் சில வேலைகளைக் கவனித்துக்கொண்டார்கள்.

பலவீனப்படுத்துதல்
2021-ம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் NCT சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, நியமன அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு மாற்றியது. அடுத்து தில்லி மாநகராட்சி சட்டம் வந்தது. BJP’s New Mantra for Victory
ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முனைகளிலிருந்தும் முற்றுகையிடப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால், அவரது நம்பிக்கைக்குரிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட அதன் உயர்மட்டத் தலைவர்கள் அமலாக்க நிறுவனங்களால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் புதிய முதல்வர் அதிஷி கைது செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது.
சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கெஜ்ரிவாலும் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட காலமாகச் சிறையில் இருந்ததால் ஆம் ஆத்மி கட்சி, தலைமை இல்லாமல் இயங்க வேண்டியிருந்தது. அது அந்த அமைப்பையே சீர்குலைத்தது. ஆம் ஆத்மி தலைவர்கள் பாஜகவுக்குத் தாவுவதற்கான மிரட்டல்கள் விடப்பட்டதாகவும் ஆசைகாட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. BJP’s New Mantra for Victory
வாக்குப்பதிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, எட்டுத் தலைவர்கள் கட்சியில் ‘வளர்ந்து வரும்’ ஊழல், ‘கொள்கைகளிலிருந்து விலகல்’ ஆகியவற்றைக் காரணம் காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்கள். வாக்குப்பதிவு தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆம் ஆத்மி ஆதரவாளர்களும் குடிசைவாழ் மக்களும் வாக்களிப்பதைத் தடுக்கக் காவல்துறையினர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார் அளிக்க முதல்வர் அதிஷியும் கெஜ்ரிவாலும் முந்தைய நாள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர்.
அரசு மட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆம் ஆத்மி நிர்வாகத்தை முடக்கப் பாடுபட்டார். மே மாதம் தில்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜாலை 2022-ம் ஆண்டு நீக்கிவிட்டுத் தனக்கு நம்பகமான வி.கே. சக்சேனாவை அமித் ஷா நியமித்தார். இத்தனைக்கும் பைஜால் ஒன்றும் ஆம் ஆத்மிக்கு உதவிகரமானவர் அல்ல. அவர் கெஜ்ரிவாலுடன் தொடர்ந்து மோதிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், தனக்கு மிகவும் நெருக்கமானவர் அங்கே இருக்க வேண்டும் என்பதால் அமித் ஷா சக்சேனாவைத் தேர்ந்தெடுத்தார். அரசாங்கம் எடுத்த ஒவ்வொரு முடிவையும் சக்சேனா எதிர்த்தார். இதன் மூலம் நிர்வாகத்தை முடக்கினார். ஒவ்வொரு பிரச்சினையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகத் துணைநிலை ஆளுநர் செயல்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பாஜக செயலாற்றியது.
BJP’s New Mantra for Victory

நிர்வாக நெருக்கடி BJP’s New Mantra for Victory
2021-ல் NCT சட்டத்தின் திருத்தம் தில்லியில் நாடாளுமன்ற ஆட்சி முறையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்தது. ‘தில்லி அரசாங்கம் என்பது துணைநிலை ஆளுநரைக் குறிக்கிறது’ என்று அந்தச் சட்டம் வெளிப்படையாக அறிவித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மாற்றுவது மக்களாட்சியின் அடிப்படைக்கே எதிரானது. இது கடுமையான நிர்வாக நெருக்கடிக்கும் வழிவகுத்தது. துறைச் செயலாளர்கள் மட்டுமின்றி இளநிலை அதிகாரிகள்கூட, ஆம் ஆத்மி அமைச்சர்களுக்குக் கீழ்ப்படியவில்லை. உண்மையான அதிகாரம் எங்குள்ளது என்பதை அறிந்த பல மூத்த அதிகாரிகள் மத்திய அரசின் முகவர்களாகவே செயல்பட்டனர். அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் அமைச்சரவை ஆவணங்களைத் துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பினார்கள். தில்லி ராஜ்பவன் போட்டி அதிகார மையமாக மாறியது.
தில்லி அமைச்சர்களின் எழுத்துபூர்வமான உத்தரவுகளை அதிகாரிகள் மீறுவதாக கெஜ்ரிவால் கூறினார். குறிப்பான நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். தேசிய மூலதன சிவில் சப்ளைஸ் ஆணையத்திற்கான ஒருங்கிணைப்பு வழிமுறை குறித்த தனது எழுத்துபூர்வ உத்தரவுகளை தலைமைச் செயலாளர் நிறைவேற்ற மறுத்ததாக அதிஷி புகார் கூறினார்.
இதனால் ஏற்பட்ட குழப்பம் மோடி – ஷாவுக்கு இரண்டு விதங்களில் உதவியது. முதலாவதாக, ஆம் ஆத்மி அமைச்சர்களைத் திறமையற்றவர்களாகச் சித்தரிக்க உதவியது. இரண்டாவதாக, தேர்தலின்போது வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு அவர்கள் அதைப் பயன்படுத்தினார்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரி அக்ஷய் மராத்தே இதை இப்படி விளக்குகிறார்: “நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்கள் அரசாங்கம் செயலிழந்துபோகும்; அது வீழ்ச்சியடையும் என்று தில்லி வாக்காளர்கள் மிரட்டப்பட்டார்கள்.”
மோடியைத் தாண்டி… BJP’s New Mantra for Victory
கடந்த நவம்பரில் நடந்த மகாராஷ்டிரத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் உத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் இப்போது விரிவான வரைபடமாக உருவாகியுள்ளது. மோடி வழிபாட்டிலிருந்து அந்தந்த மாநிலத்திற்கான நுண்ணிய வியூகமாக இது உருப்பெற்றது. ஹரியானா தேர்தலில்தான் இது தொடங்கியது. BJP’s New Mantra for Victory
இத்தனை ஆண்டுகளாக, நரேந்திர மோடியின் பகட்டான பிரச்சாரக் கூட்டங்கள், அதிரடியான ரோடு ஷோக்கள், மெகா பேரணிகள் ஆகியவை பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக அமைந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பேரணிகளும் தெரு நிகழ்ச்சிகளும் பாஜக வெற்றியை உறுதி செய்தன. ஆனால், அரசாங்கத்தின் நலிவடைந்த நலத்திட்டங்கள், தோல்வியுற்ற பொருளாதாரம், நிறைவேற்றப்படாத ‘மோடி உத்தரவாதங்கள்’ ஆகியவை ஊதிப் பெருக்கப்பட்ட மோடி மந்திரத்தின் வலிமையைக் குறைத்தன. BJP’s New Mantra for Victory
வாக்காளர் பட்டியலில் மோசடி
இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மோடியும் ஷாவும் நுண் மட்டத்தில் அரசியலைக் கையாளும் உத்தியைக் கையிலெடுத்தனர். புதிய உத்தி வாக்காளர் பட்டியல்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. மகாராஷ்டிரத்திலும் தில்லியிலும் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டன, ஏற்கனவே உள்ள பெயர்கள் மொத்தமாக நீக்கப்பட்டன. BJP’s New Mantra for Victory
எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் அவர்கள் முன்னிலை வகித்த தொகுதிகளில் நீக்கங்கள் நடந்ததாக குற்றம்சாட்டின. தில்லியில், 2024
மக்களவைத் தேர்தலுக்கும் 2025 சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையிலான ஏழு மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் வழக்கத்திற்கு மாறாக 3,99,362 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2020 சட்டமன்றத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை வெறும் 416,648தான். தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பது தேசிய அளவிலான உத்தியாக மாறி வருகிறது. BJP’s New Mantra for Victory
மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய ஐந்து மாதங்களிலும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் மகாராஷ்டிரத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுக் காலத்தில் 32 லட்சம் புதிய வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். BJP’s New Mantra for Victory
மாநிலத்தின் வாக்காளர் எண்ணிக்கை 9.7 கோடி என்றும், இது மகாராஷ்டிரத்தின் மொத்த வயது வந்தோர் மக்கள்தொகையான 9.54 கோடியைவிட அதிகம் என்றும் ராகுல் கூறினார். தேர்தல் ஆணையம் விரைவில் முழு உண்மைகளையும் வெளியிடும் என்று கூறியது. ஆனால் இன்னும் வெளியிடவில்லை.

இலவசங்கள்: பாஜகவின் இரட்டை நாக்கு
‘ரெவ்டி’ அதாவது இலவசங்கள் என்பது வெற்றிக்கான மற்றொரு அம்சமாகும். இலவசங்களை வழங்குவதற்காக எதிர்க்கட்சிகளை மோடி சாடியுள்ளார், ஜூலை மாதம் உத்தரப்பிரதேசத்தில் ‘ஓட்டுகளுக்கான இலவச கலாச்சாரம்’ நாட்டை ‘இருளில்’ கொண்டுசெல்கிறது என்று எச்சரித்தார். அக்டோபரில் மத்தியப் பிரதேசத்தில் அதே குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் ‘மாநிலத்தைக் கடனில் மூழ்கடிப்பதாக’ அவர் கூறினார்.
ஆனால், இதே பாஜக ஹரியானா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், தில்லி ஆகிய மாநிலங்களில் இலவசத் திட்டங்களை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான இலவசத் திட்டங்களை பாஜக கூட்டணி அரசு அறிவித்தது. தில்லியில் இலவச ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், ஒற்றை மகளின் திருமணத்திற்கு ரூ.51,000, ஏழை விதவைகளின் மகள்களுக்கு ரூ.51,000 சிறப்புப் பரிசு, ஊனமுற்றோர், விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் எனப் பல திட்டங்கள் அமலாகின்றன.
தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகள் கேள்விகளை எழுப்பியுள்ளன. படிவம் 17Cஐப் பதிவேற்ற மறுத்ததற்கும், ஒவ்வொரு சட்டமன்றச் சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதற்கும் ஆணையம் மறுத்தது எதிர்க்கட்சிகளை ஆவேசம் கொள்ளவைத்தது.
அவமானப்படுத்தி முடக்குதல்
பாஜகவின் அடித்தள அளவிலான நுண் நிர்வாகத்தின் மற்றொரு கூறு, எதிர்க்கட்சிகளின் ஆளுமைகளுக்குக் களங்கம் ஏற்படுத்துவது. அனைத்து மூத்த ஆம் ஆத்மி தலைவர்களும் ED/CBI வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நடக்கும் அவதூறுகளுக்குப் பலியாகின்றனர். இது ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகங்களின் வலிமையால், குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்களின் வலிமையால் நடந்தது. பாஜக ஆதரவு ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் ஊழல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தனது பிரச்சாரத்தில் மோடி முன்வைத்தார்.
இப்படிப் பல விதமான முறைகேடான உத்திகள் மூலமாகத்தான் பாஜக அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. தில்லி தேர்தல் இந்தப் பரிசோதனைக்கான சிறந்த களமாக அமைந்துவிட்டிருக்கிறது. இதுவே வெற்றிக்கான பாஜகவின் புதிய மந்திரம்.
*
நன்றி: தி வயர் இணைய இதழ்
தமிழில்: தேவா