பாஜக முக்கிய பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது!

அரசியல்

பிளஸ் 2 மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (27) இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார்.

பின்னர் அச்சிறுமியிடம் காதலிப்பதாக கூறிய வினோத், திருமண ஆசைக்காட்டி அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது.

அத்துடன் அந்த சிறுமியிடம் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். கலங்கி போன அந்த சிறுமி, வினோத்திடம் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் விசாரணை நடத்த அவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து திருவரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.

சமீபத்தில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்த பார்த்தசாரதி போக்சோ சட்டத்தில் கைதாகி இருந்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து பாலியல் வழக்கில் அடுத்தடுத்து கைதாகி வருவது கட்சியினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

2 மாணவியின் உயிரை பறித்த ’துணிவு’ திரைப்படம்!

தமிழ்நாடு எதிரொலி: சர்ச்சையில் சிக்காமல் தப்பிய கேரள ஆளுநர்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

2 thoughts on “பாஜக முக்கிய பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது!

  1. அட விடுங்கப்பா, ஜல்சா கட்சின்னாலே இதெல்லாம் சகஜம்தானே…

  2. ஜல்ஸா பார்ட்டி அப்படி தான் இருக்கும்., பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கட்சி… கட்சிக்காரன் கண் வச்சா அவ்வளவு தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *