ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 67.90 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக களமிறங்கினர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி, 10 மணி வாக்கில் பின்னடைவை சந்தித்தது.
இதற்கிடையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்தநிலையில், ஹரியானாவில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
ஒரு தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையவில்லை. அந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. தேசிய லோக் தளம் கட்சி இரண்டு இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டேனே? – அப்டேட் குமாரு
அதிமுகவுக்குள் குழப்பம்: கட்சியை தக்கவைக்க எடப்பாடி போராட்டம்… விளாசிய சிவசங்கர்