கேரளாவில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார்.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 14 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் -1, சிபிஐ(எம்)-1, கேரள காங்கிரஸ் -1, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி-1, பாஜக-1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.
இதில் திரிச்சூர் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் சுனில் குமாரைக் காட்டிலும் 73148 வாக்கு வித்தியாசத்தில், 400553 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் சுரேஷ் கோபி.
கேரளாவில் இதுவரை வெற்றியே பெறாத பாஜக முதல் முறையாக ஒரு இடத்தை கைப்பற்ற உள்ளது.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் இருந்தார். இதனால் இரண்டு இடங்களில் பாஜக வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜீவ் சந்திரசேகரை 4663 வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளார் சசி தரூர்.
எனினும் சுரேஷ் கோபி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் கேரளாவில் வெற்றி கணக்கை பாஜக தொடங்கவுள்ளது.
கேரளாவில் இருந்து மக்களவைக்கு செல்லும் முதல் பாஜக எம்.பியாக உள்ளார் சுரேஷ் கோபி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி!
புதுச்சேரி : ஓங்கும் காங்கிரஸ் கை!