மேயர் தேர்தல்: பாஜக வெற்றி – அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

Published On:

| By Kavi

bjp win chandigarh mayor election

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. bjp win chandigarh mayor election

35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 6 கவுன்சிலர்களும், பாஜகவினருக்கு 16 கவுன்சிலர்களும் உள்ளனர்.

மேலும் மாநகராட்சியின் அலுவல் ரீதியான உறுப்பினர் என்ற அடிப்படையில் சண்டிகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரிக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளது.

இந்த நிலையில் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சண்டிகர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜனவரி 30) காலை 11:20 மணிக்கு தொடங்கி 12:19 வரை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெய்ஸ்ரீ தாகூர் தலைமையில் தேர்தல் நடந்தது.

பாஜக வெற்றி! bjp win chandigarh mayor election

bjp win chandigarh mayor election
பாஜக வேட்பாளர் வெற்றி

மொத்தமுள்ள 35 வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், 19 ,வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் கவுர் பாபல் வெற்றி பெற்று புதிய மேயராக தேர்வாகியுள்ளார்.

அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் பிரேம் லதா 17 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

ஆம் ஆத்மி வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருந்த போதும் தோல்வி அடைந்திருப்பது இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்கள், காங்கிரசுக்கு 6+1(ஒரு எம்பி ஓட்டு) என 20 வாக்குகள் இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்னாக காங்கிரஸ் கவுன்சிலர் குரூபக்ஸ் ராவத் பாஜக கூட்டணிக்கு சென்றதால், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணியின் பலம் 19ஆக இருந்தது.

அணி மாறி வாக்கு! bjp win chandigarh mayor election

எனினும் 16 கவுன்சிலர்களைக் கொண்ட பாஜக 19 வாக்குகளை பெற்று எப்படி வெற்றி பெற்றது என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கட்சித் தாவல்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஆம் ஆத்மி – காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எனினும் மூன்று கவுன்சிலர்கள் ஆம் ஆத்மிக்கு எதிராக வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது மேயர் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே மேயர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, தேர்தல் அதிகாரியாக இருந்த அணில் மாஷி வாக்குச்சீட்டில் மாற்றம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அணில் மாஷிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. bjp win chandigarh mayor election

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share