வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெல்லும் என்று பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்தார்.
இன்று (பிப்ரவரி 5) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
அப்போது அவர், “அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் பார்வையாளர்கள் மாடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். காங்கிரஸ் செயல்பாடுகளால் அக்கட்சிக்கு மட்டுமில்லை. பிற கட்சிகளுக்கும் நாட்டுக்கும் கூட மிகப் பெரிய இழப்பு. எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
நாட்டு மக்களின் மன நிலையை என்னால் பார்க்க முடிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கும் மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும். இதில் பாஜக மட்டும் 370 தொகுதிகளில் வெற்றி பெறும். மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு பாஜக அடித்தளமிடும்.
மீண்டும் நாங்கள் அரசாங்கம் அமைப்பது வெகு தொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
அதுபோன்று காங்கிரஸ் கட்சி இழுத்து மூடும் நிலையில் உள்ளது எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Video: ”நீ விதைத்த வினை எல்லாம்” கேப்டனை பழி வாங்கிய இளம்வீரர்
இழுத்து மூடும் நிலையில் காங்கிரஸ் : மக்களவையில் மோடி விமர்சனம்!
Comments are closed.