ஆவடி நாசர் நீக்கம்: பாராட்டிய அண்ணாமலை

Published On:

| By christopher

ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கி புதிய மாற்றத்திற்கு வித்திட்ட முதல்வரின் முடிவை பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு பின் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை இன்று (மே 12) சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ஆவின் பால் விலை ஒரே ஆண்டில் 3 முறை உயர்த்தப்பட்டது. பால் விலையை குறைக்க முடியாமலும், விவசாயிகளுக்கு விலை உயர்த்தி கொடுக்க முடியாத நிலையிலும், கடந்த பிப்ரவரி மாதம் பச்சைநிற ஆவின் பாலின் கொழுப்பை குறைத்தனர்.

இதனையெல்லாம் தாண்டி ’பால் விலை உயர்வுக்கு காரணம் ஜிஎஸ்டி தான்’ என்று அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்தார்.

அத்துடன் திமுக தொண்டர் மீது அவர் கல் எறிந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கி புதிய மாற்றத்திற்கு வித்திட்ட முதல்வரின் முடிவை பாஜக வரவேற்கிறது.” என்றார்.

மேலும் புதிதாக பால்வளத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சராவது முதல்வரின் வழிகாட்டலின் படி, தேர்தல் அறிக்கையில் கூறியபடி பால் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதி உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தடை!

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share