ராகுல் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் பாஜக: கனிமொழி

அரசியல்

எதிர்காலத்தில் ராகுல்காந்தி அரசியலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக அரசு தகுதிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.

இதனையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்துள்ளதாக மக்களவை செயலகம் இன்று (மார்ச் 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தகுதி நீக்கம் னபனனநடத்தி வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், ”எத்தனையோ விஷயங்களில் தூங்கி கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, ராகுல்காந்திக்கு எதிரான நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்குவதில் எவ்வளவு வேகமாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.” என்றார்.

மேலும் அவர், “எதிர்கட்சிகளின் வாயை மூடுவதற்கு ஜனநாயகத்திற்கு எதிராக எத்தனையோ விதமான யுத்திகளை பாஜக கைகொண்டு வருகிறது.

பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் மக்கள் ஆதரவை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் அவரது குரலை ஒடுக்கிவிட வேண்டும், எதிர்காலத்தில் அவர் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக அரசு தற்போது தகுதிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கிரிமினல்களுக்கு அமைச்சரவை… எதிர்க்கட்சியினர் தகுதிநீக்கம்! – மம்தா பானர்ஜி

தரமற்ற மருந்துகள்: வாட்ஸ் அப்-பில் புகார் அளிக்கலாம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *