திருவண்ணாமலையில் விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (நவம்பர் 18) பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. bjp tamilnadu protest
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 7 விவசாயிகள் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தையும் போராட்டத்தையும் அதிமுக முன்னெடுக்கும்” என்று எச்சரித்திருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023), @BJP4Tamilnadu சார்பாக, தலைவர்கள்,… pic.twitter.com/OdSUZu7d4c
— K.Annamalai (@annamalai_k) November 17, 2023
இந்நிலையில் விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் நாளை திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளை தமிழ்நாடு பாஜக சார்பில், தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார். bjp tamilnadu protest
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’நூலகம்’: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்!
அண்ணா பல்கலை தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ்: ஐஷு போனதுக்கு காரணமே நீ தான்… நிக்சன் மூக்கை உடைத்த அர்ச்சனா