பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாஜக வில் இருந்து வெளியேறுவதாக நேற்று (ஜனவரி 3 ) காயத்ரி ரகுராம் கூறினார்.
இந்நிலையில்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று (ஜனவரி 4) சந்தித்தார் அப்போது பேசிய அவர்” பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்.
கட்சியில் இருந்து செல்வோர், புகழ்ந்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால் அவதூறு சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் காவலரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இரண்டு பேரையும் தாமதமாகவே காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்