பாஜக பூஜ்யமாக வேண்டும்: நிதிஷ் சந்திப்புக்கு பின் பேசிய மம்தா

அரசியல் இந்தியா

பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

2024நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முயன்று வருகிறது.

அதேநேரம் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை , பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் இன்று(ஏப்ரல்24) சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ”பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மக்களுக்கும் பாஜகவுக்கும் எதிரானதாக மட்டுமே இருக்கப் போகிறது. நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் தேர்தல் போருக்காக ஒன்றிணைவதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

நிதிஷ் குமாரிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் பிகாரில் இருந்துதான் ஆரம்பித்தது.

அதனால் நாம் பிகாரில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அங்கே முடிவு செய்ய வேண்டும்.

அதற்கும் முன்னதாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாகக் கடத்த வேண்டும். எனக்கு பாஜகவை ஜீரோவாக்க வேண்டும். அவர்கள் இப்போது ஊடக துணையோடு பெரிய ஹீரோவாக உலாவருகிறார்கள்” என்று கூறினார் மம்தா.

இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ”இந்த சந்திப்பின்போது, குறிப்பிடும்படியாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறோம்” என்றார்.

இதனிடையே, இன்று மாலை லக்னோ சென்று சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவை சந்திக்கவுள்ளார் நிதிஷ் குமார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *