“முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்புசீவி விடுகிறார்கள்” என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று (அக்டோபர் 5) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் தொல்.திருமாவளவன் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால் 1991ல் நடந்தது இப்போதும் நடைபெறும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். திருமாவளவன், சீமான் இருவரும் தேசத் துரோகிகள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதனால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்புசீவி விடுகிறார்கள். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
தமிழக டிஜிபி, பிஎப்ஐக்கு ஆதரவாகவும், திருமாவளவனுக்கு சாதகமாகவும் பேசியது துரதிர்ஷடவசமானது.
காவல் துறைக்கு தலைவராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் காட்டாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், அது திருத்தப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
Comments are closed.