தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜகவினர் இன்று (ஆகஸ்ட்14) பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
நாடு முழுவதும் 76-ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தநிலையில், தேச பிரிவினையின் போது உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இன்று இந்தியா முழுவதும் பாஜக சார்பில் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை காரணம் காட்டி பல மாவட்டங்களிலும் பாஜக பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பாஜகவினர் பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை பேரிகார்டுகள் அமைத்து தடுத்தனர்.
காவல்துறை அனுமதி மறுப்பால் பல மாவட்டங்களிலும் பாஜகவினர் தனியார் திருமண மண்டபங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தினர்.
புதுச்சேரியில் காவல்துறை அனுமதியுடன் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அணிவகுப்பு பேரணி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
வணங்காமுடி
”உயிரைக்குடிக்கும் நீட்… தமிழ்நாடல்ல இந்தியாவுக்கே இதே நிலை தான்”- அன்புமணி