ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (நவம்பர் 16) வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நவம்பர் 25-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
பாஜக தேர்தல் வாக்குறுதி முக்கிய அம்சங்கள்:
கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2800-க்கு கொள்முதல் செய்யப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் சேமிப்பு பத்திரம் வழங்கப்படும்.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.500-லிருந்து ரூ.900-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநிலத்தில் 2.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், பைகள் வாங்க ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
சுகாதாரத்துறையில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
காங்கிரஸ் அரசின் ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
பன்னீர் மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!