மணிப்பூர் விவகாரத்தில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் இன்று (ஜூலை 24) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், அதே இடத்தில் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் இன்று அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர்.
இதனிடையே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் கொடுத்து உள்ளன.
இந்நிலையில், இன்று(ஜூலை 24) காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
26 எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த காந்தி சிலை அருகே இந்த போராட்டம் தற்போது நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவு முகாம் துவக்கம்!