சனாதன பேச்சு: சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

அரசியல்

சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று (செப்டம்பர் 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் பேரணியாக செல்ல முயன்றனர். காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் 125 இடங்களுக்கும் மேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக கொடுத்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை அதிகாலையில் கைது செய்கிறார்கள்.

சானாதன தர்மத்திற்கு எதிராக பேசியவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன். கர்நாடகா, டெல்லி, பீகாரில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

உதயநிதிக்கு எதிராக எடப்பாடி வழக்கு!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? – உதயநிதி கேள்வி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *