”பாஜகவுக்கு வந்தால் 20 கோடி- வராவிட்டால் வழக்கு”: மிரட்டப்படுவதாக ஆம் ஆத்மி புகார்!

அரசியல்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பிஜேபியில் சேர்ந்தால் 20 கோடி ரூபாய் தரப்படும் என அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேரம் பேசியிருப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கும் பிஜேபிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்குக் காரணம், இந்த ஆண்டு குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலே.

”குஜராத்தில் ஆம் ஆத்மி காலூன்றக் கூடாது என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது. இதனால்தான் ஆம் ஆத்மி கட்சியினர் மீது வழக்குகள் பாய்கின்றன.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடுகளில் சோதனை நடைபெற்றது” என்று ஆம் ஆத்மி பாஜக மீது குற்றம் சாட்டுகிறது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவுக்கு வரும் எம்.எல்.ஏக்களுக்கு 20 கோடி ரூபாய் தரப்படும் என பிஜேபி பேரம் பேசியிருப்பதாக ஆம் ஆத்மி அடுத்த குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங், “அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பார்தி, குல்தீப் யாதவ் ஆகிய ஆம் ஆத்மியின் 4 எம்எல்ஏக்களையும் பிஜேபியின் தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்களிடம், தாங்கள் பிஜேபியில் இணைந்தால் 20 கோடி ரூபாய் வழங்கப்படும். பிற எம்எல்ஏக்களை அழைத்து வந்தால் 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என பேரம் பேசியுள்ளனர்.

பிஜேபியில் இணையாவிட்டால், மணீஷ் சிசோடியாவைப்போல் பொய் வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்” என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக தங்களிடம் பேரம் பேசியதாக, 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் விளக்கம் அளித்தனர்.

bjp offered rs 20 crore


இதுகுறித்து டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பிஜேபி தலைவர்கள் அணுகி பேரம் பேசியதையும், மிரட்டியதையும் சீரியஸாகப் பார்க்கிறோம்.

இது மிகவும் தீவிரமான விஷயம். இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி நிலைமையை ஆராய்வோம்” என்றார்.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “எங்களுடைய எம்எல்ஏக்கள் பகத்சிங்கின் சீடர்கள்.

அவர்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள். அவர்கள் உயிரைத் தியாகம் செய்வார்களே, தவிர துரோகம் இழைக்கமாட்டார்கள்.

அவர்களுக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையால் எந்த பயமும் இல்லை” என்றார். ஏற்கெனவே அவர், ட்விட்டர் பதிவு ஒன்றின்மூலம் பிஜேபியை எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

நான்கூட கைது செய்யப்படலாம்! குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *